பிஎன் வியூகத்தலைவர் அப்துல் ரஹ்மான் டஹ்லானுக்கு ஆட்சிக்கவிழ்ப்பு செய்வதில் உடன்பாடில்லை.
அதுவும் இப்போதைய நிலையில் அதற்கு அவசியமுமில்லை என்று பிரதமர்துறை அமைச்சர் நினைக்கிறார்.
“அரசியல் புரட்சியில் எனக்கு உடன்பாடில்லை. அதுவும் ஆட்சித்தவணை முடியும் தருவாயில் இருக்கும்போது அதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டிய அவசியமும் இல்லை”, என மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் ரஹ்மான் கூறினார்.
வாரக் கடைசியில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் முக்கியமான அறிவிப்பைச் செய்யப்போகிறார் என்று கூறப்பட்டதை அடுத்து சிலாங்கூரில் ஆட்சிக்கவிழ்ப்பு நடக்கப்போவதாக ஊகங்கள் பரவின.
ஆனால், பிரதமர் முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் தயிப் முகம்மட் அம்னோவுக்கு மீண்டும் திரும்பி வருவதாக அறிவித்ததும் எதிர்பார்ப்பு ஏமாற்றமாக முடிந்தது.
நேற்று, அம்னோ தகவல் தலைவர் அனுவார் மூசா, பார்த்துக்கொண்டே இருங்கள் முகம்மட்டைத் தொடர்ந்து மேலும் பல பக்கத்தான் ஹரபான் தலைவர்கள் வரப்போகிறார்கள் என்று கூறினார்.
உண்மைத்தான் காஜாங் உறுப்பினர் தனது கணவரின் விடுதலைக்காவும், கோம்பாக் உறுப்பினர் தனது மனைவிக்கு சீட்வேண்டியும் , ஸ்ரீ சித்தியா உறுப்பினர் மத்திய அமைச்சர் பதவி வேண்டியும், பத்துதீகா உறுப்பினர் அல்தான்துயாவிற்கு சேர வேண்டிய ஸ்கோபியன் நீர்மூழ்கி கமிஷன் தனக்கு கொடுத்தால் , அம்னோவிற்கு தாவுவதாக கூறினார்களாம். ஆக அவர்களின் கோரிக்கையை ஏற்று கொள்வதா இல்லையா என்ற முடிவை ரோஸ்மாவிடம் நஜிப் விட்டுவிட்டாராம்.