இசி ஐயத்துக்குரிய 42,000 வாக்காளர் பட்டியலை மீண்டும் காட்சிக்கு வைக்கிறது

இசி என்ற தேர்தல் ஆணையம் ஐயத்துக்குரிய 42,051 வாக்காளர் பட்டியலை நாளை தொடக்கம் டிசம்பர் 31ம் தேதி வரையில் தனது www.spr.gov.my இணையத் தளத்தில் காட்சிக்கு வைத்திருக்கும்.

சம்பந்தப்பட்ட நபர்கள் அல்லது அவர்களுடைய வாரிசுகள் வாக்காளர்களுடைய நிலை குறித்து உறுதி செய்வதற்கு உதவியாக அந்தப் பட்டியல் இணையத்தில் சேர்க்கப்படுவதாக இசி இன்று வெளியிட்ட அறிக்கை கூறியது.

“அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பெயரைக் கொண்ட நபர் முதலில் தேசியப் பதிவுத் துறைக்குச் சென்று தமது அடையாளக் கார்டு எண்ணை உறுதி செய்து கொள்ள வேண்டும். அடுத்து தமது வாக்காளர் தகுதி குறித்த பிரச்னையைத் தீர்ப்பதற்கு அவர் தேர்தல் ஆணையத்துக்கு செல்ல வேண்டும்,” என அந்த அறிக்கை குறிப்பிட்டது.

மேல் விவரங்களுக்கு பொது மக்கள் தேர்தல் ஆணையத் தலைமையகத்துடன் தொடர்பு கொள்ளலாம். அதன் தொலைபேசி எண் 03-8885 6565, தொலை நகல் எண் 03-8888 9112. பொது மக்கள் மாநில தேர்தல் அலுவலகங்களுடனும் தொடர்பு கொள்ளலாம்.

TAGS: