மலேசியாஇன்று -வின் ஆதரவாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
நமது பண்பாடு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற இலக்கணமற்ற சூழலில் வாழ்வதால், அனுசரித்துச் செல்வது என்ற வகையில் எதையும் தாங்கும் இதயமாக நாம் மாறிக்கொண்டுருப்பதால், இதயத்தின் துடிப்பும் அதிகமாகி வருகிறது!
இந்த தீபாவளி நிகழ்ச்சி நாம் அனைவரும் இன்பமாகவும், இணக்கமாகவும் குடும்பத்துடனும் உறவினர்களுடனும் கொண்டாடி மகிழ ஒரு வாய்ப்பை வழங்கும் என்பது திண்ணம். நமது மனங்களிலும், குடும்பத்திலும் நாட்டிலும் இந்தத் தீபத்துருநாள் இருளை அகற்றி புத்தொளிமிக்க ஒரு தெளிவை உருவாக்க வேண்டும் என்ற மன உறுதியை எடுப்போம்.
மலேசிய இன்று மற்றும் செம்பருத்தி குடும்பத்தினர்.
செம்பருத்தி அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்……
13 ம் நூற்றாண்டில் ..காட்டி கொடுத்த சில தமிழர்களால் ..தமிழ் அரசுகளை அழித்து ..தங்களை வலு படுத்திய தெலுங்கர்களினால் அறிமுக படுத்த பட்டது இந்த தீபாவளி..800 வருடங்களாக இந்த தகர தமிழ் நாட்டில் அரசியல் ..வர்த்தகம் ..சினிமா எல்லாம் தெலுங்கர்கள் வசம் ..கோவணம் கட்டிய குப்பனும் ..சுப்பனும் கூட நன்றி என்ற சொல்லை மறந்து thank you என்று ஆங்கிலத்தில் பேசும்வரை போய் தமிழ் அழுகிவிட்டது…அறிவித்தல் பலகைகளை பாருங்கள் ..சென்ட்ரல் ஆஸ்ப்பிட்டல்…chineseபாஸ்ட் பூட் ..புல்லரிக்கின்றது