பத்து லட்சம் மக்கள் வரை மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு வந்துள்ளனர் என்பது, அந்நாட்டை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளி உள்ளதாக, ஐ.நாவிற்கான வங்கதேச பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
ரக்கைன் மாநிலத்தில் உள்ள ரோஹஞ்சாக்களுக்கு எதிரான வன்முறை தொடர்வதாக குறிப்பிட்ட ஷமீம் அஹ்சன், தினமும் ஆயிரக்கணக்கானோர் நாட்டினுள் வருகிறார்கள்
என்றார்.
ஆகஸ்டு மாதம், ரக்கைன் போராளிகள், மியான்மர் காவல் சாவடி மீது தாக்குதல் நடத்தியது முதல் இதுவரை ஆறு லட்சம் பேர் வங்கதேசத்திற்கு தப்பி வந்துள்ளனர்.
அஹ்சன், ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக பேசினார்.
இதுவரை 340 மில்லியன் டாலர்கள் சேர்ந்துள்ள நிலையில், 434மில்லியன் டாலர்கள் பணம் சேர்ந்தால், பத்து லட்சத்திற்கு அதிகமான மக்களுக்கு ஆறு மாதங்கள் வரை உதவ முடியும் என்கிறது ஐ.நா அமைப்பு.
குடிநீர், வசிப்பிடம் மற்றும் உணவிற்கு பஞ்சமுள்ளதாக குறிப்பிடும் தொண்டு அமைப்புகள், குழந்தைகள் அதிகம் மடந்துள்ளதாக கூறுகின்றன.
இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று
என்றார் அஹ்சன், மக்களை பாதுகாப்பாக, மரியாதையோடு, தானாக முன்வந்து திரும்ப அழைத்துகொள்கிறோம்
என மியான்மர் கூறும் வரை, உதவிகள் என்பது முக்கியம் என்றார் அவர்.
ரோஹிஞ்சாக்களில் பெரும்பான்மையானோர் இஸ்லாமியர்கள். அவர்கள் ரக்கைன் மாநிலத்தில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்தனர்.
அவர்களை குடிமக்களாக ஏற்றுக்கொள்ளாத மியான்மர் அரசு, வங்கதேசத்தில் இருந்து வந்த நாடற்றவர்கள் என எடுத்துக்கொள்கிறது.
ரோஹிஞ்சா இன அங்கிகாரம் அப்பட்டமாக மறுக்கப்படுவதே முட்டுக்கட்டையாக உள்ளது
என்றார் அவர்.
இதை இன சுத்திகரிப்பிற்கான சிறந்த எடுத்துக்காட்டு
என்கிறது ஐ.நா
ஆகஸ்டு 25ஆம் தேதின்ஞ்சா போராளிகள், மியான்மர் பாதுகாப்புத்துறை சாவடிகளில் தாக்குதல் நடத்தியது முதல் இந்த மக்கள் அங்கிருந்து வெளியேறத் துவங்கினர்.ஊ
இதற்கு முன்பு நடந்த கலவரங்களால் பாதிக்கப்பட்டு, வங்க தேசத்தில் குடியேறிய ரோஹிஞ்சாக்கள் மூன்று லட்சம் பேர்.
ஐ.நா அகதிகள் மையத்தின் தலைவரான ஃபிலிப்போ கிராண்டி கூறுகையில், இரு நாடுகளும் மக்கள் நாடுதிரும்புதல் குறித்து பேசத்துவங்கினாலும், ரோஹிஞ்சாக்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்பி செல்லும் நிலையில் மியான்மர் இல்லை என்றார். -BBC_Tamil