இசாவின் கீழ் புதிய கைதுகள், முகைதின் மௌனம்

சபாவில் பயங்கரவாதிகள் எனக் கூறப்படும் சிலர் சமீபத்தில் இசா சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பது குறித்து கருத்துக்கூற இன்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் மறுத்து விட்டார்.

“போலீஸ் படைத் தலைவர் இதனைக் கையாள விடுங்கள்”, என்று அவர் எஸ்கே செரி செந்துல்1 க்கு வருகை அளித்தபோது கூறினார்.

இசா சட்டம் அகற்றப்படும் என்று நஜிப் நிருவாகம் கடந்த செப்டம்பர் மாதம் வாக்குறுதி அளித்திருந்ததால், இப்புதிய நடவடிக்கை குறித்து முகைதின் துளைத்தெடுக்கப்பட்டார்.

திங்கள்கிழமையிலிருந்து நேற்று வரையில் புக்கிட் அமான் பயங்கரவாதி எதிர்ப்பு குழு அவர்களைப் பிடித்ததாக கூறப்படுகிறது.

இந்நடவடிக்கை குறித்த முழு விபரமும் கிடைக்கவில்லை. கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லிருந்து 13 வரையில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் பாஸ் உறுப்பினர்களும் அடங்குவர் என்று சபா பாஸ் தலைவர் முகமட் அமினுடின் அலிங்கை மேற்கோள்காட்டி ஸ்டார் செய்தி ஒன்று கூறுகிறது.

TAGS: