டிரம்பின் அமெரிக்க பயண தடை உத்தரவை முழு அளவில் செயல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.  சர்வதேச அளவில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளையும் அவர் எடுத்து வருகிறார்.

இந்த நிலையில், சத், ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள டிரம்ப் தடை விதித்து கடந்த செப்டம்பரில் அறிவிப்பு வெளியிட்டார்.  இந்த நாடுகளில் பெருமளவில் முஸ்லிம் மக்கள் வசித்து வருகின்றனர்.  டிரம்பின் இந்த முடிவு முஸ்லிம் மக்களுக்கு எதிரானது என பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.  எனினும் அவர் தனது முடிவை செயல்படுத்துவதில் தீவிரமுடன் இருந்துள்ளார்.

இதனிடையே டிரம்பின் பயண தடை அறிவிப்புக்கு இடைக்கால தடை வழங்கி உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.  அதனை விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் ரூத் பேடர் கின்ஸ்பர்க் மற்றும் சோனியா சோட்டோமேயர், டிரம்பின் கொள்கை முடிவை முழு அளவில் செயல்பட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர்.

-dailythanthi.com