‘பயங்கரவாத அமைப்பில்’ ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், இராணுவ அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுகளின் ஊழியர்கள் என மொத்தம் 2,756 பொது ஊழியர்களைத் துருக்கி பணிநீக்கம் செய்தது.
அவர்கள் அந்தப் ‘பயங்கரவாத’ அமைப்பின் உறுப்பினர்கள் அல்லது அதன் கட்டமைப்போடு தொடர்பு வைத்துகொண்டு, தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என துருக்கியின் அதிகாரப்பூர்வச் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை முதல், சுமார் 50,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; இராணுவ வீரர்கள், போலிஸ்காரர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்கள் உள்ளிட்ட சுமார் 150,000 பேர் பணிநீக்கம் அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவை இருப்பிடமாகக் கொண்ட, கல்வியாளர் ஃபேதுல்லா குலெனுடன் அவர்கள் தொடர்புப்படுத்தப்பட்டனர். ஃபேதுல்லா குலென் ஆட்சியைக் கவிழ்க்க சதிதிட்டம் தீட்டுகிறார் என்று, அரசாங்கம் அவர்மீது குற்றம் சுமத்தியது.
கடந்த 1999 முதல், பென்சில்வேனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட குலேன், அக்குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு; ஆட்சிக்கவிழ்ப்புக்குக் கண்டனமும் தெரிவித்து வந்தார்.
240 பேரின் உயிரைப் பலிகொண்ட அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிதிட்டத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசாங்கம் கருதுகிறது.