ஆங்கிலத்தில் இரண்டாயிரம் வார்த்தைகளை கற்று கொண்ட, கொரில்லா கோகோ..

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் கடந்த 1971-ல் ஜாக்குலின் என்ற கொரில்லா குரங்குக்கு பிரசவம் நடந்தது. பிரசவத்தில் ஜாக்குலினுக்கு பெண் கொரில்லா பிறந்தது.

ஆனால் 6 மாதம் ஆனதும்   ஜாக்குலின் கொரில்லா தனது குட்டியை ஏற்று கொள்ளவில்லை. இதை தொடர்ந்து

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் சைக்காலஜி படித்துக் கொண்டிருந்த பென்னி  என்ற மாணவி அந்த குட்டி கொரில்லாவை தனக்கு கொடுக்க கேட்டு கொண்டார்.  பென்னி அந்த  ஆண்டுக்கான புராஜெக்டாக மனித மிருக உரையாடல் என்ற தலைப்பை தேர்வு செய்து இருந்தார். இதை தொந்து
மிருகக்காட்சி சாலைக்கு சென்ற பென்னி  அந்த உரிமையாளரிடம் கேட்டு  குட்டி கொரில்லாவை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார்.

கொரில்லாவுக்கு கோகோ என பெயரிடப்பட்டது. உலகின் ஆகச்சிறந்த உறவு அந்த நொடி முதல் பென்னிக்கும், கோகோவுக்கும் இடையில் தொடங்கியது. நான்கு ஆண்டுகளுக்குள் மிருகங்களோடு பேசுவது என்ற ஆராய்ச்சியை முடித்து விடலாம் என பென்னி நினைத்திருந்த நிலையில் இன்றும் கோகோவுடனான அவரின் உறவு தொடர்கிறது. இன்று கோகோ சைகை மொழியில் மனிதர்களோடு உரையாடுகிறாள், ஆங்கிலத்தில் இரண்டாயிரம் வார்த்தைகளை அவளால் புரிந்துகொள்ள முடியும்.

இது குறித்து பென்னி கூறுகையில், இந்த உறவு உலகின் பார்வைக்கு எப்படியாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது குறித்து எனக்கு கவலை இல்லை. எனக்கும் கோகோவுக்குமான அன்பும், உறவும் எங்களுக்கு மட்டும் தான் புரியும். கோகோ ஒரு அற்புதமான மற்றும் அழகான தேவதை என கூறியுள்ளார்.