துருக்கி நாட்டு ராணுவ ஹெலிகாப்டரை, சிரியாவில் குர்திஷ் படையினர் சுட்டு வீழ்த்தினர்..

உள்நாட்டுப் போராலும், ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தாலும் நிலைகுலைந்து கிடக்கும் சிரியா நாட்டின் வடமேற்கு பகுதியில் இட்லிப் மற்றும் அருகாமையில் உள்ள மாகாணங்களையொட்டிய தங்கள் நாட்டு எல்லைப்பகுதியில் 12 கண்காணிப்பு முகாம்களை துருக்கி அரசு அமைத்துள்ளது.

துருக்கி நாட்டு விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் இங்கிருந்து புறப்பட்டு சென்று சிரியா அதிபரின் ஆட்சியை எதிர்த்துப் போராடிவரும் குர்திஷ் போராளிகள்மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், சிரியாவின் வடபகுதியில் உள்ள ஆப்ரின் நகரில் உள்ள போராளிகள் முகாம்கள் மீது நேற்று துருக்கி நடத்திய வான்வழி தாக்குதல்களில் 39 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின்போது துருக்கி நாட்டுக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டரை குர்திஷ் படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும், இதில் இரு விமானிகள் உயிரிழந்ததாகவும் துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இஸ்தான்புல் நகரில் தனது கட்சியினரிடையே இந்த தகவலை நேற்று தெரிவித்த எர்டோகன், ‘நாம் போரில் இருப்பதால் இதுபோன்ற இழப்புகள் எல்லாம் ஏற்படும். ஒரு ஹெலிகாப்டரை நாம் இழந்திருக்கலாம். ஆனால், இதற்கான விலையை அவர்கள் தர வேண்டி இருக்கும்’ என்று குறிப்பிட்டார்.

-athirvu.com