இந்திய மலேசியர்களின் எழுச்சி தின சிறப்பு வழிபாடு, ஹிண்ட்ராப் மக்கள் சக்தி ஏற்பாடு

மலேசிய அரசமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள உரிமைகள் மறுக்கப்பட்ட அநீதியை எதிர்த்து இந்திய மலேசியர்கள் கடந்த நவம்பர் 25, 2007 இல் கோலாலம்பூரில் ஹிண்ட்ராப் ஏற்பாட்டில் நிகழ்த்திய மாபெரும் அமைதிப் போராட்டத்தின் 4 ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் பொருட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்துவதற்கு நாடு முழுதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் பள்ளிகள், உயர் கல்வி, உபகாரச் சம்பளம், சமயச் சுதந்திரம், வியாபார உரிமைகள் என சமூக மற்றும் பொருளாதார உரிமைகளுக்காக 18 கோரிக்கைகளை முன்வைத்து அந்த மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்திய மலேசியர்களின் எழுச்சி நாளாகக் கருதப்படும் இந்நிகழ்வினை ஹிண்ட்ராப் இயக்கத்தினர் ஆண்டுதோறும் அனுசரித்து வருகின்றனர். அந்த வகையில் 4ஆம் ஆண்டு நிறைவை கருத்தில் கொண்டு எதிர்வரும் நவம்பர் 25, 2011 வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நாடு முழுவதும் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

 

சிறப்பு வழிபாடு நடைபெரும் விபரங்கள்:

பினாங்கு மாநிலம்  – ஸ்ரீ சிவசக்தி ஆலயம், பகான் டாலாம், பட்டர்வெர்த் – 012 5637 614;
கெடா மாநிலம் – ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம், பாயா பெசார், லூனாஸ் – 012 429 2819 / 012 4442755; 
பேராக் மாநிலம்- வீரமுத்து மகா மாரியம்மன் ஆலயம், புந்தோங், ஈப்போ – 012 469 6068;
கோலாலம்பூர் – கோர்ட்டு மலை பிள்ளையார் ஆலயம் – 016 313 7840;
நெகிரி செம்பிலான் மாநிலம் – ஸ்ரீ முருகன் ஆலயம், மம்பாவ் – 019 694 4693;
ஜோகூர் மாநிலம் – அறுள்மிகு ஓம்-ஸ்ரீ மகா மரியம்மன் ஆலயம், ஸ்கூடாய் 019 710 2895 / 016 717 8692

ஆலயங்களுக்கு வர இயலாதவர்கள் அவரர்தம் இல்லங்களில் 18 அகல் விளக்கேற்றி 18 கோரிக்கைகளும் நிரைவேற வழிபடுமாறு  வி.சம்புலிங்கம், ஹிண்ட்ராப் மலேசிய தேசிய ஒருங்கிணைப்பாளர், கேட்டுக்கொண்டுள்ளார்.

TAGS: