“நான் கடுமையாக உழைத்துக்கொடுத்த வரிப்பணத்தைக் கொண்டு பகட்டு வாழ்க்கை வாழ்கிறார்களே என்பதை நினைக்கும்போது உள்ளம் கொதிக்கிறது.”
பிகேஆ: ஷாரிசாட் கணவர் என்எப்சி பணத்தை உம்ராவுக்குப் பயன்படுத்தினார்
கண்ணாடி: என்எப்சி ஷாரிசாட்டுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் பணம் கறக்கும் கறவை மாடாக இருப்பது கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகிறது.
பொதுப்பணத்தைச் சொந்த பணமாக நினைத்துச் செலவு செய்திருக்கிறார்கள். அப்படிச் செய்ததைச் சாமர்த்தியமாக மறைத்துமிருக்கிறார்கள். அதே வேளையில் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற நினைப்பில் மெத்தனமாகவும் இருந்துவிட்டார்கள்.
ஆனால், இது இணையத்தளம் ஆட்சிசெய்யும் காலம் என்பதை மறந்துவிட்டார்கள். இதில் எதையும் நீண்ட காலத்துக்கு மறைத்து வைக்க முடியாது. சரி, இதோடு கதை முடிந்துவிட்டதென்றா நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை.
பயங்கரமான விசயமே இனிமேல்தான் இருக்கிறது. பார்த்துக்கொண்டே இருங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. விசாரணை என்பது நடக்கும்.பொதுநலனைக் கருத்தில்கொண்டு விசாரணை செய்தோம். எல்லாம் முறைப்படிதான் நடந்துள்ளது என்று கூறி முடித்து விடுவார்கள்.
மைய நீரோட்ட ஊடகங்கள் இந்த முறைகேடுகள் பற்றிய செய்திகளை வெளியிடா. வெளியிட்டால் உரிமம் பறிபோகுமே.
ஆர்மகெடோன்: பாவம், தேசிய ஃபீட்லோட் கார்பரேஷன் தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயிலுக்குக் குறைந்த சம்பளம். அதனால்தான் அவர் உம்ரா செய்வதற்கு இன்னொருவர் உதவி தேவையாக இருந்துள்ளது.
என்எப்சி அவரது ஹஜ்ஜுப் பயணத்துக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். அதன் பின்னராவது அவர் செய்ததை நினைத்து வருத்தப்படுவார் என்றும் சரியான பாதையில் நடக்கத் தொடங்குவார் என்றும் எதிர்பார்ப்போம்.
என்சி: முன்னோக்கிய ஆதாயம் என்பார்களே அது இதுதான். என்எப்சி, காலூன்றி நடப்பதற்குமுன்பே அதில் உள்ள பணத்தைச் செலவிடத் தொடங்கிவிட்டார்கள் சாலேயும் குடும்பத்தாரும்.
எம்ஏசிசி (மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம்) இது போலீஸ் விவகாரம் என்றுகூறி போலீசிடம் ஒப்படைத்துவிட்டதாகக் கூறுகிறது, ஐஜிபி எம்ஏசிசி-இடமிருந்து கடிதம் வந்ததாக ‘நினைவில்லை’ என்கிறார். இனி என்ன, சாலே குடும்பத்தார் கையை வீசிக்கொண்டு சுதந்திரமாகத் திரியலாம். எல்லாம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கைங்கரியம்.
தே தாரிக்: அதிர்ச்சிதரும் தகவலாக இருக்கிறது. இது உண்மையாக இருந்தால் ஷாரிசாட்டின் கணவரும் மகனும் நம்பிக்கை மோசடிக் குற்றம் செய்திருக்கிறார்கள்.
சட்டப்படி அவர்கள் சுங்கை பூலோ சிறைக்கூடம் அல்லது ஏதாவது ஒரு சிறையில் அரசாங்க விருந்தாளிகளாக போக வேண்டும். அப்படி எதுவும் நடக்காவிட்டால் இங்கிருப்பது 1மலேசியா அல்ல 2மலேசியா என்பது நிரூபணமாகும். அதாவது மேட்டுக்குடியினருக்கு ஒரு சட்டம், சாமானியருக்கு ஒரு சட்டம்.
ரிக் தியோ: மக்களின் வரிப்பணத்தைத் தனிப்பட்ட செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் கொடுத்த கடனை நிதி அமைச்சு திரும்பப் பெற வேண்டும். கடன் எதற்காகக் கொடுக்கப்பட்டதோ அதற்காகத்தான் செலவிடப்பட வேண்டும். அதைக் கொண்டு வேறு செலவுகள் செய்யக்கூடாது.
நான் கடுமையாக உழைத்துக்கொடுத்த வரிப்பணத்தைக் கொண்டு பகட்டு வாழ்க்கை வாழ்கிறார்களே என்பதை நினைக்கும்போது உள்ளம் கொதிக்கிறது.