ஊழலைப் பற்றி என்ன சொல்வது, அது அரசியலமைப்புக்கு முரணானது இல்லையா?

“நஸ்ரி அவர்களே, என்னை தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். நான் ஒரினச் சேர்க்கையை ஆதரிப்பதில்லை. ஆனால் நீங்கள் எங்களுக்கு நல்ல வாதத்தை முன் வைக்க வேண்டும். நீங்களே வழக்குரைஞர். நான் அல்ல.”

நஸ்ரி: ஒரினச் சேர்க்கை அரசியலமைப்புக்கு முரணானது

டேவிட் தாஸ்: எவ்வளவு அருமையான அறிக்கை. ஒரினச் சேர்க்கை இஸ்லாத்துக்கு எதிரானது. இஸ்லாம் கூட்டரசு சமயம். அதனால் ஒரினச் சேர்க்கை அரசியலைப்புக்கு எதிரானது. அனைவரும் சமம். சமய சுதந்திரம் போன்ற கோட்பாடுகள் எங்கே போய் விட்டன?

அவை ஒரினச் சேர்க்கைக்கு அப்பாற்பட்டவை. இறைவன், சொர்க்கம் அல்லது நரகம் என்ற அடிப்படையில் பௌத்த மதத்தினர் சிந்திப்பதில்லை. அவர்களுக்கு நல்ல நடத்தையே மோட்சத்திற்கான வழியாகும்.

இந்துக்கள் மறுபிறவியில் நம்பிக்கை வைத்துள்ளனர். இயேசு இறைவனுடைய குழந்தை என கிறிஸ்துவர்கள் நம்புகின்றனர். அவர் மரணமடைந்தார். மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்றும் அவர்கள் கருதுகின்றனர். யூதர்கள் பழைய வேதத்தில் நம்பிக்கை வைத்துள்ளனர்.

எல்லா சமயங்களும் பல பொதுவான அம்சங்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக நல்ல நடத்தை, தவறான நடத்தை என வரும் போது அவை ஒரே கருத்தைக் கொண்டுள்ளன. பல வகையான சித்தாந்தங்கள் உள்ளன. ஆகவே ஷாரியாவுடன் அரசியலமைப்பைத் தொடர்புபடுத்துவது சரியல்ல.

எல்லாச் சட்டங்களும் சமயத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. அனைத்து சமய போதனைகளும் சட்டமாக்கப்படவில்லை. எல்லா நம்பிக்கைகளும் மதிக்கப்பட வேண்டும்.

அனைவருடைய சமயங்களும்  மதிக்கப்பட வேண்டும். அனைவருடைய மனித உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.

பென் காஸி: சூதாட்டம் இந்த நாட்டின் அதிகாரத்துவ சமயமான இஸ்லாத்துக்கு எதிரானது தானே. ஆகவே கெந்திங் சூதாட்டம் மையம் அரசியலமைப்புக்கு எதிரானது. சரியா இல்லையா? இருந்தும் பிஎன் அரசாங்கம் அதனை ஏன் தடை செய்யவில்லை?

பிரதமர் துறை அமைச்சர் அவர்களே, நீங்கள் சொல்லும் காரணத்துக்கு அடிப்படையே இல்லை. இஸ்லாத்துக்கு எதிராக பல விஷயங்கள் உள்ளன. அதில் இசா சட்டமும் ஒன்றாகும். அதன் கீழ் மக்கள் கைது செய்யப்படுகின்றனர். ஆனால் நீதி மன்றத்தில் நிறுத்தப்படுவதில்லை. அந்தப் பட்டியல் நீளும்.

இஸ்லாத்துக்கு புறம்பாக இந்த நாட்டில் நடத்தப்படுகின்ற பல விஷயங்களைப் பற்றி நீங்கள் விளக்க வேண்டும். நஸ்ரி அவர்களே என்னை தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். நான் ஒரினச் சேர்க்கையை ஆதரிப்பதில்லை. ஆனால் நீங்கள் எங்களுக்கு நல்ல வாதத்தை முன் வைக்க வேண்டும். நீங்களே வழக்குரைஞர். நான் அல்ல.

பூன் ஹோர் லோய்: ஊழலைப் பற்றி என்ன சொல்வது, அது அரசியலமைப்புக்கு முரணானது இல்லையா?

போர்க் கினாவ்லு: நாட்டின் அரசியலமைப்பை கீழறுப்புச் செய்யும் இன்னொரு அப்பட்டமான முயற்சி இதுவாகும். மலேசியா மதச் சார்பற்ற அரசியலமைப்புக்கு உட்பட்ட அரசர் ஆட்சியாகும். ஆகவே அரசியலமைப்பு எந்த மாமன்னருக்கோ அல்லது சமயத்திற்கோ உட்பட்டதில்லை.

அதனை எந்த வகையில் திரித்தாலும் உண்மையை மறைக்க முடியாது.

அஸிஸி கான்: உங்கள் வாதத்தை எடுத்துக் கொண்டால் இஸ்லாமிய சமயத்தைச் சாராத யாருக்கும் மலேசியாவில் அரசியலமைப்பு உரிமைகள் இருக்கக் கூடாது. ஏனெனில் அவர்கள் இஸ்லாத்துக்கு எதிரானவர்கள் எனக் கருதப்பட வேண்டும்.

இந்த நாட்டின் ‘அதிகாரத்துவ சமயமாக’ இஸ்லாம் இருக்கலாம். இஸ்லாம், அரசியலமைப்பு என்பது அதன் பொருள் அல்ல.

அதே வாதத்தை எடுத்துக் கொள்வோம். மலேசியா எந்த ஒரு மனித உரிமை சாசனத்திலும் கையெழுத்திடவில்லை. அதனால் ஐநா தரங்களுக்கு ஏற்ப மலேசியா சட்டவிரோதமான நாடா?

பார்வையாளன்: வீக்கிபிடியா: “கூட்டரசின் சமயம் இஸ்லாம் என மூன்றாவது பிரிவு கூறுகிறது. ஆனால் அது அரசியலமைப்பின் (பிரிவு 4(3)ல் கூறப்பட்டுள்ள மற்ற விதிகளைப் பாதிக்கவில்லை என அது தொடர்ந்து கூறுகிறது. ஆகவே இஸ்லாம் மலேசியாவின் சமயம் என்பதால் அரசியலமைப்புக்குள் அது இஸ்லாமியக் கோட்பாடுகளை இறக்குமதி செய்ய வேண்டும் என்பது பொருள் அல்ல.”  

ஆனால் இப்போது ஜமில் கிர் பாஹாரோம், நஸ்ரி போன்ற அமைச்சர்கள் மதச் சார்பற்ற அரசியலமைப்புக்குள் இஸ்லாமிய விதிமுறைகளையும் கோட்பாடுகளையும் இறக்குமதி செய்வதின் மூலம் அதனை இஸ்லாமிய மயமாக்குவதற்கு முயலுவதாகத் தோன்றுகிறது.

TAGS: