சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், அவரது தோள்பட்டை வலிக்குப் போடப்பட்ட ஸ்டீராய்ட் ஊசி ஒத்துக்கொள்ளாததால் இன்று அதிகாலை மறுபடியும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சனிக்கிழமை அவர், கடந்த நவம்பரில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட இடப்பக்கத் தோள் வலிப்பதாக முறையிட்டதை அடுத்து ஸ்டீராய்ட் ஊசி போடப்பட்டதாக பிகேஆர் தொடர்பு இயக்குனர் ஃபாஹ்மி பாட்சில் தெரிவித்தார். .
அந்த ஊசி போடப்பட்டதும் அன்வாரின் இதயத் துடிப்பு கவலையளிக்கும் வகையில் குறைந்துகொண்டு வர இன்று அதிகாலை ஒரு மணிக்கு அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இப்போது அவர் திடமாக இருப்பதாய் ஃபாஹ்மி ஓர் அறிக்கையில் கூறினார்.
அன்வார், அவர் முதல்முறையாக அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட கோலாலும்பூர் பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.