சிலாங்கூர் ஹரப்பான் தொகுதிப் பங்கீடு: இன்னும் ஆறு தொகுதிகளுக்குத் தீர்வு காண வேண்டும்

சிலாங்கூர்   பக்கத்தான்  ஹரப்பானின்   தொகுதிப்  பங்கீட்டுப்    பேச்சுகள்   இன்னும்   ஒரு    நிறைவுக்கு      வரவில்லை.

நேற்று   மூன்றாவது    தடவையாக    அப்பேச்சுகள்   நடைபெற்றதாகக்  கூறிய  சிலாங்கூர்   பக்கத்தான்   செயலாளர்   சுரைடா   கமருடின்,   இன்னும்    ஆறு
தொகுதிகளை  யாருக்கு  ஒதுக்குவது   என்ற  விவகாரம்    இழுத்துக்கொண்டே    செல்வதாக    தெரிவித்தார்.

சுங்கை  பூரோங்,  சுங்கை  பாஞ்சாங்,    ஸ்ரீ  செர்டாங்,  லெம்பா   ஜெயா,  கோட்டா  டமன்சாரா,  டுசுன்  துவா   ஆகியவையே   அவ்வாறு   தொகுதிகளாகும்.

சுரைடா   மேல்விவரம்   தெரிவிக்க   மறுத்தார்.

ஆனால்,  வேறு   சில   வட்டாரங்கள்     ஆறுக்கும்   பிகேஆரும்  பெர்சத்துவும்      ஐந்துக்கு  அமனாவும்      இரண்டுக்கு   டிஏபியும்   கோரிக்கை   வைத்திருப்பதாக     தெரிவித்தன.

2013  தேர்தலில்    பக்கத்தான்  ரக்யாட்,   கோட்டா  டமன்சாரா   தவிர்த்து    மற்ற  ஐந்தையும்   பாஸுக்குக்  கொடுத்திருந்தது.