ரயிஸ் யாத்திம் பிரதமர் சொன்னால் அமைச்சர் நிலையிலான அரசாங்கச் சிறப்பு ஆலோசகர் பதவியைவிட்டு விலகத் தயார் ஆனால் “ஒரு எடுபிடி” சொல்லி விலக மாட்டார்.
“ஜாசா அதிகாரி துன் பைசுல் அரசாங்க ஆலோசகர் பதவியிலிருந்து விலகச் சொல்கிறார். ஜோ லோ-வை விசாரிக்க வேண்டும் என்றேன் அல்லவா, அதற்காக……..பிரதமர் சொல்லட்டும் நான் விலகுவேன்.
“துன் எஃப், பொறுமையாய் இருப்பீர். பிரதமரிடம் பேசி விட்டேன். அவர் முடிவு செய்யட்டும். ஒரு எடுபிடி அதை முடிவு செய்யக்கூடாது”, என்று ரயிஸ் இன்று டிவிட் செய்திருந்தார்.
சிறப்பு விவகாரத்துறை (ஜாசா) ஆலோசனை வாரிய உறுப்பினரான துன் பைசல் இஸ்மாயில் அசிஸ், “அமைச்சர் நிலையிலான அதிகாரத்தில் உள்ளவர்கள் குறைபாடுகளைச் சொல்வதாக இருந்தால் அதற்கெனவுள்ள “முறையான வழிகளில்”தான் சொல்ல வேண்டும் இல்லையேல் பதவி விலக வேண்டும் என்று கூறியிருந்ததற்கு மூத்த அரசியல்வாதியான ரயிஸின் எதிர்வினை அது.
இவர் இந்த அளவுக்கு அவமானப்படுவதற்கு காரணம் முன்னமே உண்மையின் பக்கம் நிற்பதற்கு தவறியதால் என்பதைப் புரிந்து கொண்டால் சரி.