தேர்தல் ஆணையம் வரைந்திருந்த மேற்கு மலேசியாவுக்கான புதிய தேர்தல் எல்லைகளை மலேசிய நாடாளுமன்றம் இன்று ஏற்றுக்கொண்டு சட்டமாக்கியது.
புதிய தேர்தல் எல்லைகள் முன்மொழிதலுக்கு 129 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். 80 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
எதிரணி உறுப்பினர் “தீப்பு” (மோசடி) என்று முழக்கமிட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் “பங்கிட் ராக்யாட் ஹென்டிகான் பெனிப்புவான்” என்ற வாசகத்தைக் கொண்ட அட்டையைப் பிடித்திருந்தனர்.
பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த அட்டையைப் பிடித்திருக்கவில்லை.
வாழ்த்துகள்! வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது!