சர்ச்சைக்குள்ளான தேர்தல் எல்லை மறுசீரமைப்பு அறிக்கை அரசாங்க கெஜட்டில் பதிவு செய்யப்பட்டது

தேர்தல் ஆணையத்தின் சர்ச்சைக்குள்ளான தேர்தல் எல்லை மறுசீரமைப்பு அறிக்கையை நேற்று நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டது. இன்று அது அரசாங்க கெஜெட்டில் பதிவு செய்யப்பட்டு சட்டமாகியுள்ளது.

நேற்றைய தேதி இடப்பட்டுள்ள இந்த உத்தரவு இன்று அமலுக்கு வருகிறது.

நேற்று மாலையில், தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை நாடாளுமன்றத்தின் மக்களவை 129 வாக்குகள் ஆதரவாகவும் 80 வாக்குகள் எதிராகவும் பெற்று ஏற்றுக்கொண்டது.

தேர்தல் ஆணையத்தின் அறிக்கைக்கு நேற்று சிவில் சமூகப் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்கு வெளியில் ஆட்சேபம் தெரிவித்திருந்த போதிலும், இது நடந்தது.

இந்த எல்லை மறுசீரமைப்பு நடவடிக்கையை பிரதமர் நஜிப் தற்காத்துப் பேசினார். இந்தப் புதிய எல்லைகள் “குறிப்பிட்ட கட்சிகளுக்குச் சாதகமாக” இருக்காது என்றாரவர்.