கிட் சியாங் இஸ்கந்தர் புத்ரியில் போட்டியிடுகிறார்

 

டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அவரது பழைய கெலாங் பாத்தா தொகுதியுல், இப்போது இஸ்கந்தர் புத்ரா தொகுதியில், போட்டியிடுவார் என்று நேற்றிரவு டிஎபி உறுதிப்படுத்தியது.

அவர் இஸ்கந்தர் புத்ரியில் போட்டியிடுவது பற்றிய முடிவை கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக எடுத்ததாக டிஎபியின் தலைமைச் செயலாளர் குவான் எங் அறிவித்தார்.

முந்திய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதியில்தான் கிட் சியாங் போட்டியிட விரும்பினார். ஆனால், அவர் ஜோகூர் பாரு தொகுதியில் போட்டியிடுவதை பலர் விரும்பினர். அவர் பினாங்கில் போட்டியிட விரும்பியதாகவும் வதந்திகள் வெளியிடப்பட்டன.

கடந்த பொதுத் தேர்தலில், கிட் சியாங் ஜோகூர் முன்னார் மந்திரி பெசார் கனி ஓத்மானை கெலாங் பாத்தா தொகுதியில் தோற்கடித்தார்.