தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்க அண்டார்டிக்காவில் இருந்து பனிக்கட்டி அகழும் திட்டத்தில் கேப்டவுன்

உலகில் கடும் தண்ணீர்ப் பஞ்சத்தை எதிர்நோக்கும் முதல் பெருநகரம் என்ற நிலைக்கு அண்மையில் தள்ளப் பட்டிருந்தது தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம்.

சில மாதங்களுக்கு முன்பு இங்கு ஏப்பிரல் 16 பூஜ்ய நாளை அதாவது ஒரு சொட்டுத் தண்ணீர் கூடக் கிடைக்காத நாளை அந்நகரம் எட்டும் என நிர்ணயிக்கப் பட்டதால் பொது மக்கள் பெரும் பீதியில் இருந்தனர். மேலும் தனி நபருக்கு தினசரிப் பாவனைக்கு 50 லீட்டர் தண்ணீரைப் பாவிக்குமாறு அறிவுறுத்தப் பட்டதுடன் தண்ணீரைச் சிக்கனப் படுத்த கடும் சட்டங்களை தென்னாப்பிரிக்க அரசு விதித்திருந்தது.

மேலும் தென்னாப்பிரிக்காவில் நிலவிய கடும் வறட்சியை தேசியப் பேரிடராக அறிவித்தது அந்நாட்டு அரசு. இதனால் உலக நாடுகளும் கலக்கம் அடைந்ததுடன் தமக்கும் இந்நிலை ஏற்படும் என்று கருதி முன்னெச்செரிக்கை நடவடிக்கை மேற்கொண்டன. இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக

தென்னாப்பிரிக்காவில் அண்மையில் பெய்த மழை மற்றும் விவசாயிகளின் நடவடிக்கைகளால் அங்கு பூச்சிய தினம் தள்ளிப் போயுள்ளது. மேலும் எதிர்வரும் குளிர் காலத்திலும் அங்கு போதுமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்க அண்டார்ட்டிக்காவில் இருந்து பெரிய பனிப் பாறைகளைப் பெயர்த்துக் கொண்டு வந்து அவற்றை உருக்குவதன் மூலம் குடிநீர் பெறும் திட்டத்தையும் அரசு ஆலோசித்து வருகின்றது.

இப்பனிப்பாறைகள் மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 15 கோடி லீட்டர் தண்ணீர் பெறலாம் என்றும் இதன் மூலம் கேப்டவுனின் 30% வீத தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். ஆனால் இதற்கு மிக அதிகளவில் அரச மற்றும் தனியார் நிதியுதவி தேவைப் படுவது குறிப்பிடத்தக்கது.

-4tamilmedia.com