புதினுக்கு எதிராக ரஷ்யாவில் போராட்டம்: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

மாஸ்கோ,

ரஷியாவில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதிபர்  புதினுக்கு கடுமையான நெருக்கடியைத் தருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அலெக்ஸி நவால்னி சட்ட பிரச்னை காரணமாக அந்தத் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது.

இதையடுத்து, பலத்த எதிர்ப்பு எதுவும் இன்றி அதிபர் தேர்தலில் புதின் பல்வேறு கருத்து கணிப்புகளையும் தாண்டி ரஷிய வரலாற்றில் இதுவரை காணாத அளவுக்கு 76.66 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஆனால், தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்ததன் மூலம் புதின் ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் இன்னும் இரண்டு நாள்களில், நான்காவது முறையாக புதின் அதிபர் பதவியை ஏற்க உள்ள நிலையில் எதிர்கட்சிகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, நவால்னி ஆதரவாளர்கள் ரஷியாவின் சைபீரியா பகுதியில் முதல் முதலாக ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

-dailythanthi.com