மீண்டும் பரவும் எபோலாவுக்கு 23 பேர் பலி

காங்கோ ஜனநாயக குடியரசின் வட மேற்கு நகரான பண்டகாவில் எபோலா கண்டறியப்பட்டுள்ளதை அந்நாட்டு சுகாதார அமைச்சர் உறுதி செய்துள்ளார்.

அந்த பகுதியில் பல மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். மீண்டும் பெரும் அளவில் எபோலா பரவுவதன் அறிகுறியாக இது உள்ளது.

பண்டகாவிலிருந்து 150கிமீ தூரத்தில் இருக்கும் ஒரு கிராம பகுதியில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் முதல்முறையாக எபோலோ கண்டறியப்பட்டதிலிருந்து, இதுவரை 23 பேர் அதற்கு பலியாகியுள்ளனர்.

உலக சுகாதார நிறுவனத்தால் அனுப்பப்பட்ட 4000 டோஸ் அளவிலான சோதனை எபோலா மருந்துகள் அந்நாட்டிற்கு வந்து சேர்ந்தது. -BBC_Tamil