இஸ்ரேலிலுள்ள காசா எல்லைப்பகுதியில் நடந்த வன்முறை குறித்து விசாரணை நடத்துவதற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு வாக்களித்துள்ளது.
ஆனால், இந்த முடிவுக்கு எதிராக அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் வாக்களித்துள்ளன. முன்னதாக ஐநா மனித உரிமைகள் அமைப்பின் ஆணையர் சையத் ராவுத் அல் ஹுசைன், திங்கட்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்ட பாலத்தீனர்கள் மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் தொடுத்தது முற்றிலும் தவறான ஒன்று என்று தெரிவித்திருந்தார்.
இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் 58 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. -BBC_Tamil