பட்ஜெட் 2012 ஏற்றுக்கொள்ளப்பட்டது

நாடாளுமன்றம் மலேசிய அரசின் 2012 ஆண்டிற்கான வரவுசெலவு முன்மொழிதலை ஏற்றுக்கொண்டது.

நேற்றிரவு மணி 10.33 க்கு நாடாளுமன்றம் ரிம232.8 பில்லியன் பட்ஜெட்டை கிட்டத்தட்ட ஒரு மாத கால கடுமையான விவாதத்திற்குப் பின்னர் நிறைவேற்றியது.

மூன்றாவது முறையாக பட்ஜெட் 2012 மசோதாவை இரண்டாவது நிதி அமைச்சர் அஹமட் ஹுஸ்னி ஹனாட்ஸ்லா வாசித்த பின்னர், குரல் வழி பெரும்பான்மை வாக்குகள் மூலம் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி பிரதமர் நஜிப் வரவுசெலவு மசோதாவை தாக்கல் செய்தார். நடப்பு ஆண்டின் வரவுசெலவைவிட இது 9.4 விழுக்காடு கூடுதலாகும்.

ரிம181.6 பில்லியன் நிருவாகச் செலவிற்கும் ரிம51.2 பில்லியன் மேம்பாட்டிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

1998 ஆம் ஆண்டில் தொடங்கிய பற்றாக்குறை பட்ஜெட் வழிமுறை இம்முறையும் தொடர்கிறது என்று பிரதமர் நஜிப் கூறினார். ஆனால், அடுத்த ஆண்டிற்கான பற்றாக்குறை 4.7 விழுக்காட்டிற்கு குறையும் என்றார்.