இராணுவ வாக்குகள் கூட இப்ராஹிம் அலியை காப்பாற்ற முடியாது

தமக்குக் காலம் கடந்து கொண்டிருக்கிறது என்பது அந்த பாசிர் மாஸ் எம்பி-க்கு நன்கு தெரியும். அவர் இனிமேல் தாவுவதற்குக் கட்சிகளே இல்லை.”

இப்ராஹிம் அலி தமது தொகுதியில் இராணுவத் தளம் அமைக்கப்பட வேண்டும் என்கிறார்

ஜேம்ஸ்1067: மனிதர்கள் ஒரு போதும் பாடம் கற்றுக் கொள்ள மாட்டார்கள் எனச் சொல்வது முற்றிலும் உண்மை. தாங்கள் அதிகாரத்தில் என்றென்றும் நிலைத்திருக்கலாம் அவர்கள் எண்ணுகின்றனர். எதுவும் நிரந்தரமல்ல என்பதை நமக்கு வரலாறு இது வரை கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.

தமக்குக் காலம் கடந்து கொண்டிருக்கிறது என்பது அந்த பாசிர் மாஸ் எம்பி-க்கு நன்கு தெரியும். அவர் இனிமேல் தாவுவதற்குக் கட்சிகளே இல்லை. ஆகவே அவருக்கு தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது. அதனால் அவர் அஞ்சல் வாக்குகளைப் பெறப் போராடுகிறார்.

ரிக் தியோ: இப்ராஹிம் அலி அவர்களே உங்களுக்குப் பிரியாவிடை கூறுகிறோம். அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நீங்கள் வரலாறுதான். ஒர் இராணுவத் தளம் கூட உங்களை வெற்றி பெறச் செய்ய முடியாது. மக்கள் உங்கள் மீது வெறுப்படைந்து விட்டனர்.

நீங்கள் வைப்புத் தொகையைக் கூட இழக்க வேண்டி வரலாம். உங்களுக்கு எஞ்சியிருக்கும் இன்னும் சில வாரங்களை அனுபவியுங்கள். அதற்குப் பின்னர் உங்களுடைய கரகரத்த குரலை யாரும் கேட்கப்  போவதில்லை.

டாக்ஸ்: உலகில் அதிகமான அரசு ஊழியர்களைக் கொண்ட நாடு மலேசியாவாகும். எல்லா  அரசாங்க ஊழியர்களும் அம்னோ-பிஎன் -னுக்கு வாக்களிப்பர் என்ற எண்ணத்தில் பிஎன் ஆதரவு வாக்காளர்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதே அரசு சேவை பெருத்துப் போனதற்குக் காரணமாகும்.

அரசாங்கச் சேவையில் உள்ளவர்கள் உட்பட அதிகரித்து வரும் வெறுப்படைந்த வாக்காளர் எண்ணிக்கையை சமாளிப்பதற்கு அம்னோ நாட்டின் ஆயுதப் படை வீரர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படலாம்.

அத்துடன் அதிகமான இராணுவத் தளங்களை அமைக்கும் போதும் அவற்றுக்கு இராணுவத் தளவாடங்களை கொள்முதல் செய்யும் போதும் அம்னோபுத்ராக்களின் பைகளுக்கு தேவைப்படும் பணமும் கிடைக்கும்.

பெண்டர்: இப்ராஹிம் அலி சொல்வதை நான் ஒரு முறை மட்டும் ஒப்புக் கொள்கிறேன். தாம் உரையாற்றுவதற்காக ஸ்கோர்ப்பியோன் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் செல்வதற்கு வாய்ப்பளிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவருக்கு அந்த வாய்ப்பைக் கொடுங்கள். முடியுமானால் எல்லா பெர்க்காசா உறுப்பினர்களும் அவருடன் அந்தக் கப்பலில் ஏறட்டும். அனைத்து கிளந்தான் மக்களும் அவரை அந்த வரலாற்றுப் பூர்வமான நாளில் பார்க்கட்டும்.

அது நிகழும் போது ஸ்கோர்ப்பியோன் மூழ்கி அதனுடன் அவர்கள் அனைவரும் மூழ்குவர் என பிரார்த்தனை செய்வோம்.

ஜெரோனிமோ: தாம் வெளியே போக வேண்டிய நேரம் வந்து விட்டது என்பது இப்ராஹிம் அலிக்கு தெரியும். அதனால் அவர் விரக்தி அடைந்த நிலையில் அந்த யோசனையை சொல்லியிருக்கிறார்.

தாம் தோல்வி கண்டால் தமக்கு இப்போது கிடைக்கிற விளம்பரம் கிடைக்காது என்பதும் அவருக்கு நன்கு தெரியும். அவர் நிலைத்திருப்பதற்கு அதிக விளம்பரம் தேவை.

டூட்: ‘பிஎன் ஆதரவு வாக்காளர்கள்’ அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்ராஹிம் அலி தமது தொகுதியில் இராணுவத் தளம் அமைக்கப்பட வேண்டும் என்கிறார்.

என்ன முட்டாள்தனமான வாதம் அது? தமது இடத்தை இழந்து விடுவோம் என்ற பயமா அவருக்கு? எது எப்படி இருந்தாலும் அவர் ஏன் ‘பிஎன் ஆதரவு வாக்காளர்கள்’ பற்றிக் கவலைப்படுகிறார்? அவர் தம்மை ‘சுயேச்சை’ என பிரகடனப்படுத்திக் கொள்வதையே விரும்புவதாக நான் எண்ணியிருந்தேன்.

உங்கள் உண்மையான நிறம் வெளிச்சத்துக்கு வந்து விட்டது. இல்லையா இப்ராஹிம்?

ஒங் குவான் சின்: தாம் வெற்றி பெற அஞ்சல் வாக்குகள் தேவை என்பதை இப்ராஹிம் அலி கூட உணர்ந்துள்ளார். அதனை நாங்கள் உறுதி செய்து கொள்ள உதவியதற்கு நன்றி.

TAGS: