பெண்களின் நலனுக்கான நடவடிக்கைகள் சவுதி அரேபியாவுக்கு வோக் இதழ் கவுரவம்

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு மைதானங்களுக்குள் அனுமதி, திரையரங்குகளுக்கு அனுமதி உட்பட பல சட்டங்கள் இயற்றப்பட்டன.

இந்நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்யும் நபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 3 லட்சம் ரியால்கள் அபராதமும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு அமைச்சரவையும் ஒப்பதல் அளித்துள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த்நிலையில்   வோக் சவுதி அரேபிய இதழ் தனது ஜூன் பதிவை  சவுதிஅரேபியாவுக்கு அர்ப்பணிக்க முடிவுசெய்து உள்ளது.  சவுதி அரேபியா வோகின் முதல் பதிப்பாக இது முடிவு செய்யப்பட்ட்டு உள்ளது. (இது  1892 இல் நிறுவப்பட்டது).

இந்த இதழின் அட்டைபடத்தில்  நட்சத்திரமாக HRH ஹேபா பின் அப்துல்லா அல் சவுத் இடம் பெற்று உள்ளார். இவர் மறைந்த மன்னர் அப்துல்லாவின் மகள் ஆவார். அப்துல்லா 2005 ல் இருந்து சவுதி அரசராக  இருந்தார் 2015இல் மரணம் அடைந்தார்.

இந்த அட்டை படத்தில்  சவுதி இளவரசி  1980 களின் மெர்சிடஸ் 450 எஸ்.எல். சிவப்பு காரின் அருக்கையில் அமர்ந்திருக்கிறார்.

அவர் கூறி இருப்பதாவது:-

நமது நாட்டில், மாற்றத்தை கண்டு பயப்படுகிற சில பழமைவாதிகள் இருக்கிறார்கள். அரசு புதிய திசையை நோக்கி பயணிக்கிறது. இந்த மாற்றங்களை நான் மிகவும் உற்சாகத்துடன் ஆதரிக்கிறேன். மற்ற மக்களின் சமுதாயங்களைப் பற்றி கருத்து தெரிவிப்பது மற்றும் உங்கள் சொந்த சமுதாயம் உயர்ந்ததாகக் கருதுவது எளிது, ஆனால் மேற்கத்திய உலகம் ஒவ்வொரு நாடும் குறிப்பிட்ட மற்றும் தனித்துவமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாம் பலம் மற்றும் பலவீனங்களைக் கொண்டிருக்கிறோம். ஆனால்,

தவிர்க்க முடியாதது, அது நமது கலாச்சாரம், அதை தீர்ப்பதை விட அதை புரிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது. “என கூறி உள்ளார்.

-dailythanthi.com