செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நோக்கி வந்த ஏவுகணையை, செளதி ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது. சத்தமான குண்டுவெடிப்புகளும், வானில் புகையும் தோன்றியதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். அண்டை நாடான ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களால், இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக செளதி கூறுகிறது. கடந்த சில மாதங்களில், ரியாத் நகரத்தைக் குறிவைத்து பல ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. -BBC_Tamil

பன்னாட்டுச் செய்திஜூன் 26, 2018
























