விண்வெளியில் உள்ள குப்பைகளை அகற்றும் செயற்கை கோளை அனுப்பிய இங்கிலாந்து..

லண்டன்: பலநாடுகள் அனுப்பிய செயற்கைகோள்கள், உடைந்த செயற்கைகோள்கள், விமான பாகங்கள் என விண்வெளி முழுக்க நிறைந்துள்ளது.

அதனால் இன்னும் சில வருடங்களில் விண்வெளி மிகப்பெரிய குப்பை கூளமாக மாறும் என ‘நாசா’ தெரிவித்துள்ளது. இதை அகற்ற பல நாட்களாக ‘நாசா’ மையம் யோசித்து வருகிறது.

ஆனால் முதன்முறையாக இங்கிலாந்து களமிறங்கி உள்ளது. அதற்காக ரிமூவ் டெப்ரீஸ் என்ற செயற்கை கோளை அனுப்பியுள்ளது. சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் இது அனுப்பப்பட்டுள்ளது.

இதில் பெரிய தூண்டில் போன்ற வலை இருக்கும். இந்த வலை விண்வெளியில் உள்ள குப்பைகளை மொத்தமாக பிடித்து பூமிக்கு எடுத்து வரும். இந்த வலை சிறப்பு கலப்பு உலோகம் மூலம் வேகமாக விண்வெளியில் சுற்றும் குப்பைகளை பூமிக்கு கொண்டுவரும்.

இந்த குப்பைகள் துப்பாக்கியில் இருந்து வெளியே வரும் குண்டுகள் வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றை விரைவில் பூமிக்கு கொண்டு வருவது மிகவும் கடினம் என கூறப்படுகிறது.

தற்போது முதற்கட்டமாக சிறிய பொருட்களை மட்டுமே பூமிக்கு கொண்டு வரும். பூமியின் பாதையில் நுழைந்தவுடன் அந்த குப்பை எரிந்துவிடும் என்பதால் இந்த முறை எளிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-athirvu.in