குடியேறிகளை ஏற்றுக்கொள்ள முடியாது – இத்தாலி

அரசு சார்பற்ற நிறுவனங்களால் இயக்கப்படும் படகுகளால் காப்பாற்றப்பட்ட குடியேறிகள் இத்தாலியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மட்டாயோ சல்வினி கூறுகிறார்.

குடியேறிகள் கடத்தப்படுவதை அரசு சார்பற்ற நிறுவனங்கள் ஊக்குவிப்பதாக சல்வினி அடிக்கடி குற்றஞ்சாட்டி வருகிறார். இந்நிலையில், குடியேறிகள் விவகாரத்தில் இத்தாலியின் சுமையை குறைக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் உடன்படிக்கையை அவர் பாராட்டியுள்ளார்.

ஆயிரக்கணக்கான குடியேறிகள், குறிப்பாக ஆஃபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் இத்தாலியை சென்றடைந்துள்ளனர். -BBC_Tamil