நாசாவை மிஞ்சும் வகையில் 140 டன் எடையை சுமந்து செல்லும் வகையில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் ராக்கெட்டை சீனா தயாரித்து வருகிறது.
விண்வெளி துறையில் சீனா முன்னேற்றம் அடைந்து வருகிறது. ‘லாங் மார்ச்-9’ என்ற அதிக சக்தி படைத்த ராக்கெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த ராக்கெட் 10 மீட்டர் அகலம் கொண்டது. 4 சக்தி வாய்ந்த ‘பூஸ்டர்’கள் பொருத்தப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தலா 5 மீட்டர் அகலம் கொண்டவை. இது பூமியின் கீழ்மட்ட சுற்று பாதையில் 140 டன் எடையை சுமந்து செல்லும் திறன் படைத்தது. இந்த ராக்கெட் வருகிற 2030-ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. சீன தொழில்நுட்ப அகாடமி இதை உருவாக்கி வருகிறது.
அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையம் 13 டன் எடையை சுமந்துசெல்லும் திறன் படைத்த ராக்கெட்டை தயாரித்து வருகிறது. அது 2020-ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதை மிஞ்சும் வகையில் 140 டன் எடையை சுமந்து செல்லும் வகையில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் இந்த ராக்கெட்டை சீனா தயாரித்து வருகிறது. ஐரோப்பாவின் அரீனே 5 ராக்கெட் 20டன் எடையையும், எல்கான் முஸ்கின் பால்கான் ராக்கெட் 64டன் எடையையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது.
-athirvu.in