பிரிட்டனில் மீண்டும் நச்சு தாக்குதல் – கணவன், மனைவி கவலைக்கிடம்

லண்டன், இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த ரஷ்யாவின் முன்னாள் உளவு அதிகாரி செர்ஜி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியாவுக்கு ரசாயன விஷம் வைத்து கொல்ல முயன்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு ரஷ்யாவே பொறுப்பு என ஐரோப்பிய யூனியன் குற்றம்சாட்டி உள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் மீண்டும் அதே போன்ற விஷ தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின்  சாலிஸ்பரிக்கு அருகில் உள்ள அமிஸ்புரி  என்னுமிடத்தில் மீண்டும் இருவர் நச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று தம்பதியர்அவர்களின் வீட்டில் சுயநினைவிழந்த நிலையில் கவலைக்கிடமான முறையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இந்நிலையில்  சார்லி  பாதுகாப்பு உடை அணிந்த மருத்துவ உதவிக் குழுவினரால் ஆம்புலன்ஸ் ஒன்றில் ஏற்றப்படுவதையும் அவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் காணப்படுவதையும் காட்டும் வீடியோ ஒன்று வெளியானது. அதற்குப்பின் போலீசார்   சார்லி ரோவ்லெவும், டான் ஸ்டர்ஜஸூம்  ஆகிய இருவரும் நச்சுத் தாக்குதலுக்குள்ளாகியிருப்பதை உறுதி செய்தனர். நரம்பு மண்டலத்தை பாதிக்கின்ற நோவிசோக் நச்சு வேதிப்பொருள் அவர்களின் உடலில் கலந்துள்ளது. தற்போது குற்றச் சம்பவம் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என்பதை அறிவதற்காக ஸ்காட்லாண்ட் யார்டும் பாதுகாப்பு அமைச்சகமும் களத்தில் இறங்கியுள்ளன.

-dailythanthi.com