பிரிக்கப்பட்ட குடும்பங்களை ஒன்றிணைக்க மரபணு சோதனை

அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் பிரிக்கப்பட்ட குடும்பங்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக, குடிபெயர்ந்த சுமார் 3000 குழந்தைகளுக்கு மரபணு சோதனை செய்ய அமெரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பிரிக்கப்பட்ட குடும்பங்களை ஒன்றிணைக்க நீதிமன்றம் அளித்த காலக்கெடுவிற்குள் இதனை முடிக்க, இந்த சோதனைகள் நடத்த உத்தரவிடப்பட்டதாக அமெரிக்க சுகாதார செயலாளர் அலெக்ஸ் அசர் கூறினார்.

காவல் தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளில் சுமார் 100 பேர் 5 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று அசர் தெரிவித்தார். -BBC_Tamil