தெற்கு சூடானில் அதிகார பகிர்வுக்கு ஒப்புதல்

தெற்கு சூடான் நாட்டில் போராளிகளுடன், அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள அந்நாட்டின் அரசு ஒப்புக்கொண்டுள்ளது என சூடான் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார். உகாண்டாவில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, போராளி குழு தலைவரான ரிக் மச்சாரை மீண்டும் நாட்டின் துணை தலைவராக நியமிக்க தெற்கு சூடான் அதிபர் சால்வா கிர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடுவதாகக் கூறி ரிக் மச்சாரை, 2013-ம் ஆண்டு பதவியில் இருந்து அகற்றினார் அதிபர் சால்வா. இதை தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். நிரந்தர அமைதிக்கு இரு தரப்பில் இருந்தும் கடந்த வாரம் கையெழுத்திடப்பட்டது. -BBC_Tamil