கிளர்ச்சி குழுவுக்கும் சிரியா ராணுவத்திற்கும் ஏற்பட்ட சண்டையை அடுத்து, அங்கிருந்து தப்பித்து ஜோர்டான் எல்லை வரை சென்ற சிரியா மக்கள், மீண்டும் வீடுகளுக்குத் திரும்பி வருவதாக ஐ.நா அலுவலகம் கூறி உள்ளது. இப்போது ஜோர்டான் எல்லையில் 150 முதல் 200 மக்கள் இருப்பதாக ஐ.நா மனிதாபிமான பணிகள் ஒருங்கிணைப்பாளர் அண்டெர்ஸ் பீட்டர்சன் கூறி உள்ளார்.
அண்மையில் கிளர்ச்சி குழுவுக்கும், ராணுவத்திற்கும் ஏற்பட்ட சுமுக உடன்படிக்கையை அடுத்து பலர் நாடு திரும்பி வருகின்றனர். சிரியா தென் மேற்கு எல்லையில் ராணுவத்திற்கும் கிளர்ச்சிக் குழுவுக்கும் ஏற்பட்ட சண்டையை அடுத்து ஏறத்தாழ 3,20,000 மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர் என்கிறது ஐ.நா. -BBC_Tamil