ஆஸ்திரேலியாவில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாக இருந்த 600 கிலோ எடையுள்ள ராட்சத முதலையை சுற்றுலா துறையினர் உயிருடன் பிடித்தனர்.
ஆஸ்திரேலியாவில் வடக்கு பகுதியில் காத்ரீன் ஆறு உள்ளது. இங்கு மிகப்பெரிய அதிக எடையுடன் கூடிய ராட்சத முதலை இருந்தது. சமீபத்தில் அந்த முதலை பொதுமக்கள் வாழும் பகுதிக்குள் நுழைய கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வந்தது.
இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது. அதை தொடர்ந்து அவற்றை சுற்றுலா துறையினர் உயிருடன் பிடித்தனர்.
இதற்கு முன்பு 1974-ம் ஆண்டில் கத்ரீன் பகுதியில் ஒரு ஆண்முதலை பிடிக்கப்பட்டது.6.4 மீட்டர் நீளமான அந்த முதலை கொல்லப்பட்டது.
-athirvu.in