இந்த நகரத்தில் சம்பளமோ கோடிக்கணக்கில்.. ஆனாலும் போதவில்லை ஏன்?

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் ஒரு குடும்பம் 117,400 டாலர் சம்பளம் பெற்றாலும், அரசின் கணிப்பின் படி அது ‘குறைந்த வருமானமாக’ கருதப்படும். அது எப்படி முடியும்?

ஆறு இலக்க சம்பளம் பெறும் ஊழியர்களும் ஏழைகளாகக் கருதப்படுவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வருமானம் மற்றும் வீட்டு வாடகை செலவை கணக்கிட்டுப் பார்க்கும் போது, சில குடும்பங்களை பொறுத்த வரை இது உண்மைதான் என்று அமெரிக்காவின் வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுகின்றன.

சான் பிரான்சிஸ்கோ மற்றும் அருகிலுள்ள சான் மேட்டியோ மற்றும் மரின் கண்ட்ரிஸில் நான்கு பேரை கொண்ட ஒரு குடும்பம் 117,400 டாலர் சம்பளம் பெற்றால் குறைந்த வருமானமாக’ கருதப்படுகிறது. 73,300 டாலர் சம்பளம் பெற்றால், ‘மிகக்குறைந்த வருமானமாக’ கருதப்படுகிறது. அமெரிக்காவை மற்ற பகுதிகளை விட, இங்கே வருமான வரையறை மிக அதிகமாக உள்ளது. -BBC_Tamil