முன்னாள் ஏஜி அபாண்டி இப்போது அம்னோ உச்சமன்ற உறுப்பினர்

 

அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிட் அம்னோ உச்சமன்றத்திற்கு 11 உறுப்பினர்களை நியமித்துள்ளார். அவர்களில் ஒருவர் முன்னாள் சட்டத்துறை தலைவர் (ஏஜி) முகமட் அபாண்டி அலி.

அபாண்டி சட்டத்துறை பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவர் இடத்தில் டோமி தோமஸ் ஏஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்சமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அனிபா அமான், முன்னாள் விவசாய துணை அமைச்சர் தஜுடின் அப்துல் ரஹ்மான் மற்றும் முன்னாள் மாதர்கள் துணை அமைச்சர் அசிஸா முகமட் டுன் ஆகியோர் அடங்குவர்.

இந்த நியமனத்தில் இடம்பெறாதவர்களில் முக்கியமான்வர்கள் கட்சியின் மூத்த தலைவர் தெங்கு ரஸாலி ஹம்ஸா மற்றும் அம்னோ இளைஞர் முன்னாள் தலைவர் கைரி ஜமாலுடின் ஆவர்.

கட்சியிடம் தமது கருத்தைத் தெரிவிக்கும் சுதந்திரத்தைப் பெற்றிருக்க விரும்புவதால், தாம் கட்சியில் எந்தப் பொறுப்பிலிம் இருக்க விரும்பவில்லை என்று கைரி முன்னதாகத் தெரிவித்துள்ளார்.