அகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயார், ஜேர்மனி அதிரடி அறிவிப்பு..

மத்தியதரைக்கடலில் படகு ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட 450 அகதிகளில் 50 பேரை ஏற்றுக் கொள்ளத் தயார் என ஜேர்மனி அறிவித்துள்ளது.

பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளை இத்தாலி கோரியதற்கு இணங்க ஜேர்மனி இந்த முடிவை எடுத்துள்ளது.

இத்தாலியப் பிரதமரான Giuseppe Conte, ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற 27 நாடுகளுக்கும் எழுதியுள்ள கடிதங்களில் அகதிகள் விடயத்தில் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுமாறு கோரியதையடுத்து, ஏற்கனவே பிரான்சும், மால்ட்டாவும் ஒவ்வொன்றும் 50 அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதையடுத்து ஜேர்மனியும் 50 அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு சம்மதித்துள்ளது.

2015 அகதிகள் பிரச்சினையை அடுத்து ஜேர்மனி தனது நாட்டை அகதிகளுக்கு திறந்து விட்டதால் சட்ட விரோதமாக எல்லையை தாண்டுவது பெருமளவில் குறைந்தது.

ஆனால் பவேரிய உள்ளூர் தேர்தல்கள் Seehofer-இன், CSU-வை அகதிகள் பிரச்சினையில் ஒரு கடுமையான முடிவை எடுக்கும் நிர்ப்பந்தத்துக்குள்ளாக்கியது.

இதனால் அகதிகள் பிரச்சினை தொடர்பாக ஜேர்மன் சான்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் ஒரு நல்ல முடிவு எடுக்காவிட்டால் ராஜினாமா செய்வதாக Seehofer மிரட்டல் விடுக்குமளவிற்கு விடயம் மோசமாயிற்று.

அதனால் அகதிகள் பிரச்சினை தொடர்பாக ஜேர்மன் சான்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் ஒரு கடுமையான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்.

என்றாலும் போன மாதம் Brussels-இல் நடைபெற்ற உச்சி மாநாட்டில் உறுதியளித்தபடி உறுப்பினர் நாடுகளுக்கு வெளியில் இருந்து வரும் அகதிகளை ஏற்றுக் கொள்ளும் பொறுப்பை பகிர்ந்து கொள்ளும் கடமையும் ஜேர்மனிக்கு உள்ளது.

இதன்படி ஜேர்மனி 50 அகதிகளை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது.

ஜேர்மனியின் குறித்த முடிவுக்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள பல அகதிகள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-athirvu.in