இஸ்ரேலுக்கு ஐ.நா கடும் எச்சரிக்கை!

காஸா மீது இஸ்ரேல் விதித்துள்ள புதிய தடைகள் மனிதாபிமான நிலைமைகளில் மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் சபை கடுமையாக எச்சரித்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன நிலப்பரப்பிற்கான ஐ.நாவின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் இது குறித்து தனது கரிசனையை வெளியிட்டுள்ளார்.

காஸாவிலுள்ள மனிதாபிமான நிலைமைகள் சீரடைய வேண்டுமாயின், இருதரப்பும் மோதல்களை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

காஸாவிற்கான எரிபொருள் பரிமாற்றத்தை நிறுத்துவதற்கு இராணுவ விவகாரங்களுக்கான அமைச்சர் அவிக்டோர் லிபர்மென் தீர்மானித்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது.

அத்துடன் காஸாவிலுள்ள மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட கடல் எல்லையின் அளவையும் மட்டுப்படுத்துவதாக இஸ்ரேல் கூறியிருந்தது.

காஸாவில் இயங்கும் ஹமாஸ் இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கையாக கடந்த 9 ஆம் திகதி காஸா மீது இஸ்ரேல் தடைகளை விதித்திருந்தது.

இதன்பிரகாரம் காஸாவிற்கான பிரதான வணிக்க மார்க்கத்தையும் இஸ்ரேல் அரசாங்கம் மூடியிருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பல்வேறு மனித உரிமைக் குழுக்களும் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

-athirvu.in