தென்கொரியாவின் உள்ளேஉங்டோ என்ற தீவுக்கு அண்மைய கடற்பரப்பில் 420 மீட்டர் ஆழத்தில் 113 ஆண்டுகள் பழமையான மிகவும் பெறுமதியான ரஷ்யப் போர்க் கப்பல் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இப்போர்க் கப்பல் ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே 1904 முதல் 1905 ஆமாண்டு வரை போர் நடைபெற்ற போது மூழ்கடிக்கப் பட்ட இக்கப்பல் ‘டிமிட்ரி டான்ஸ்கோய்’ என்ற போர்க் கப்பல் ஆகும்.
இந்த இழப்பு ரஷ்யாவுக்கு பேரிழப்பாக இருக்கக் காரணம் அக்கப்பலில் 189 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்கள் வைக்கப் பட்டிருந்தமை ஆகும். இவற்றின் எடை மாத்திரம் 2 இலட்சம் கிலோ எனப்படுகின்றது. மேலும் இக்கப்பலில் இருந்த சிப்பந்திகளில் 60 பேர் கொல்லப் பட்டும் 120 பேர் படுகாயம் அடைந்தும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் இக்கப்பலானது குறித்த உள்ளேஉங்கடான் தீவின் கடற்கரையில் இருந்து 1.6 km தொலைவில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
பல நாடுகளைச் சேர்ந்த வல்லுனர்களால் கண்டு பிடிக்கப் பட்ட இக்கப்பல் பெரிதும் சேதம் அடைந்துள்ளதுடன் இது குறித்து நீர்மூழ்கிக் கப்பல்களால் எடுக்கப் பட்ட புகைப் படங்களும் வெளியாகி உள்ளன. தற்போது கிரெம்ளினில் உள்ள ரஷ்ய அதிகாரிகள் இந்தக் கப்பலில் இருந்து தங்கக் கட்டிகள் அல்லது தங்க நாணயங்கள் மீட்கப் பட்டால் அவற்றை மொத்தமாகத் தம்மிடம் வழங்க வேண்டும் என்று அறிவித்திருப்பதாகத் தெரிய வருகின்றது.
-4tamilmedia.com