சத் நாட்டில் போகோ ஹரம் தீவிரவாதிகள் தாக்குதல்: 18 பேர் பலி; 10 பெண்கள் கடத்தல்

என்டிஜமீனா, நைஜீரியா நாட்டின் எல்லையை ஒட்டிய சத் நாட்டின் தபவுவா நகரின் தெற்கே கிராமம் ஒன்றில் போகோ ஹரம் அமைப்பினை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

அவர்கள் அங்கிருந்த 18 பேரை கொன்றுள்ளனர்.  இந்த தாக்குதலில் 2 பேர் காயமடைந்து உள்ளனர்.  10 பெண்கள் கடத்தப்பட்டு உள்ளனர்.

நைஜீரியாவில் கடந்த 2009ம் ஆண்டில் ஊடுருவிய போகோ ஹரம் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தினால் இந்த பகுதியில் 20 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர்.  இதனால் 20 லட்சம் பேர் அங்கிருந்து புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.

போகோ ஹரம் தீவிரவாதிகளை ஒழிப்பதற்கான நைஜீரியா நாட்டின் ராணுவ முயற்சியில் சத், கேமரூன் மற்றும் நைஜர் ஆகியவை இணைந்துள்ளன.

கடந்த மே மாதத்தில் சத் ராணுவ சோதனை சாவடி பகுதியில் நடந்த தாக்குதலில், 4 அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர் ஒருவர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.

நைஜர் நாட்டின் தென்மேற்கே நடந்த ராணுவ தாக்குதலில் நேற்று 10 போகோ ஹரம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

-dailythanthi.com