வெள்ளையர்களின் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் உறுதி அளித்துள்ளார். இன ஒற்றுமைக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஜிம்பாப்வேயில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி நடந்த பொது கூட்டத்தில் அவர் இவ்வாறாக பேசி உள்ளார்.
ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே அரசாங்கம் நூற்றுகணக்கான வெள்ளைக்கார விவசாயிகளிடமிருந்து நிலத்தை கைப்பற்றுவதை ஆதரித்தது. ஆனால், அவை கடந்த காலம் என்று எமர்சன் கூறி உள்ளார். “கருப்பு விவசாயியோ, வெள்ளை விவசாயியோ, அவர் ஜிம்பாப்வே விவசாயி” என்று தனது உரையில் அதிபர் குறிப்பிட்டார். -BBC_Tamil