காபூல், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் இன்று நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயம் அடைந்தனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டின் துணை அதிபராக இருக்கும் அப்துல் ரஷீத் டோஸ்டம் நாடு திரும்பிய நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராணுவ ஜெனரலாக இருந்த இவர் மீது போர்க்குற்ற விசாரணை நடந்தது.
கடந்த துருக்கி சென்ற அப்துல் ரஷீத் விசாரணைக்கு பயந்து அவர் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் அவர் மருத்துவ சிகிச்சைக்காக துருக்கியில் தங்கி இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஓராண்டுக்கு பிறகு ஆப்கானிஸ்தானுக்கு அப்துல் ரஷீத் டோஸ்டம் திரும்பிய நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்தஒரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.
-dailythanthi.com