ஜப்பானை மிரட்டுகிறது ஜாங்டரி புயல்…

ஜப்பான் நாட்டை நெருங்கும் ஜாங்டரி புயலால் டோக்கியோவிலும், பிற விமான நிலையங்களில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய 107 விமான சேவைகளை ரத்து செய்து உள்ளதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

ஜப்பான் நாட்டை ‘ஜாங்டரி’ (வானம்பாடி) என்று பெயரிடப்பட்டு உள்ள புயல் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நேரத்தில் இது தாக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. இந்த புயல் காரணமாக டோக்கியோவிலும், ஹோன்சு தீவு பகுதியிலும் மிகப் பலத்த மழை பெய்யும். 15 அங்குல அளவுக்கு இந்த மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டோக்கியோவிலும், பிற விமான நிலையங்களில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய 107 விமான சேவைகளை ரத்து செய்து உள்ளதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் கூறுகிறது.

நேற்று இரவு டோக்கியோவில் நடைபெறவிருந்த வாணவேடிக்கை திருவிழா புயல், மழையினால் ஒத்தி போடப்பட்டு உள்ளது.

ஜப்பானுக்கு ஜூலை மாதம், இயற்கை பேரிடர் மாதமாக மாறி விட்டது. ஏற்கனவே கடந்த சில தினங்களாக கடுமையான அனல் காற்று வீசி அங்கு 80-க்கும் மேற்பட்டோர் பலியானதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.

இப்போது இந்த புயல், மழையினால் என்ன சேதம் ஏற்படப்போகிறதோ என ஜப்பான் மக்கள் கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.

-athirvu.in