கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை புதுப்பிக்கும் வட கொரியா

வாஷிங்டன், அமெரிக்க உளவு செயற்கைக்கோள்கள் வட கொரிய தொழிற்சாலையில்  கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை  புதுப்பிக்கப்பட்ட நடவடிக்கைகளை கண்டறிந்துள்ளன. இது  அமெரிக்காவை அடைவதற்கான திறன் கொண்டவை  என  அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர்  தெரிவித்து உள்ளார்.

சனும்டாங்கில்   உள்ளே மற்றும்  வெளியே சென்று வாகனங்கள்  செயற்கைகோள் படங்களில் தெரிகிறது. ஆனால் ஏவுகணை கட்டுமான எந்தளவு மேம்பட்டது என்பதைக் காட்டவில்லை. உளவுத்துறை வகைப்படுத்தப்படுவதால், அதிகாரப்பூர்வ பெயர் வெளியிடாத அதிகாரி ஒருவர்  ராய்ட்டரிடம் கூறி உள்ளார்.

வட கொரியா பியோங்யாங்கின் புறநகர்ப் பகுதியில் பெரிய ஆராய்ச்சி மையத்தில் ஒன்று அல்லது இரண்டு புதிய திரவ எரிபொருள் கொண்ட கண்டம் விட்டு கண்டம் தாவும்  ஏவுகணைகளை உருவாக்குவதாக நேற்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்து உள்ளது.

ராய்ட்டருடன் செய்தி எஜென்சியிடம் பேசிய அமெரிக்க அதிகாரியின் தகவல் படி  அந்த புகைப்படத்தில் வடகொரியா ஐ.சி.பீ.எம்.ஸை நகர்த்துவதற்கு ஒரு டிரக் மற்றும் மூடிய டிரைலர் ஒன்றைக் பயன்படுத்தியது காட்டப்பட்டு உள்ளது.

வெள்ளை மாளிகை உடனடியாக இதற்கு பதிலளிக்கவில்லை.

-dailythanthi.com