கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குதப்புணர்ச்சி குற்றச்சாட்டு மீது எதிர்வாதம் செய்வதற்கு எதிர்பாராத வகையில் சாட்சிக் கூண்டிலிருந்து சாட்சியமளிப்பதற்குப் பதில் குற்றம் சாட்டப்பட்டவருக்கான கூண்டிலிருந்து வாக்குமூலம் கொடுக்கிறார்.
அன்வாருக்கு மூன்று வழிகள் இருந்தன- சாட்சிக் கூண்டிலிருந்தவாறு சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டு வாக்குமூலம் கொடுப்பது, குற்றம் சாட்டப்பட்டவருக்கான கூண்டிலிருந்து வாக்குமூலம் கொடுப்பது (இதில் அவரை குறுக்கு விசாரணை செய்ய முடியாது )அல்லது மௌனமாக இருப்பது.
இன்று காலை நீதிமன்றம் கூடிய போது அந்த மூன்று வழிகளையும் கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் ஜபிடின் முகமட் டியா எடுத்துரைத்தார்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கான கூண்டிலிருந்து வாக்குமூலம் கொடுக்க விரும்புவதாக அன்வார் நீதிபதி ஜபிடினிடம் கூறினார். அரசாங்கத் தரப்பு அவரை கேள்வி கேட்க முடியாது என்பது அதன் பொருள் ஆகும்.
சாட்சிக் கூண்டிலிருந்து வாக்குமூலம் கொடுத்தால் அரசு தரப்பு குறுக்கு விசாரணைக்கு அன்வார் உட்பட வேண்டியிருக்கும். அதனால் ஆதாரங்களுக்கு கூடினபட்ச முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கும்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த முதலாவது இரண்டு வழக்கு விசாரணைகளில், அதிகார அத்துமீறல், குதப்புணர்ச்சி 1 குற்றச்சாட்டுக்கள் மீதான எதிர்வாதத்தில் அன்வார் சாட்சிக் கூண்டிலிருந்து வாக்குமூலம் அளிப்பதைத் தேர்வு செய்தார்.
2008ம் ஆண்டு ஜுன் மாதம் 26ம் தேதி பிற்பகல் மணி 3.01க்கும் மாலை மணி 4.30க்கும் இடையில் தேசா டமன்சாரா ஆடம்பர அடுக்கு மாடி வீடு ஒன்றில் தமது முன்னாள் உதவியாளரான 25 வயது முகமட் சைபுல் புஹாரி அஸ்லானைக் குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக அன்வார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
(இன்னும் தொடரும்)