டெஹ்ரான் : ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வளர்ந்த நாடுகளுக்கும் இடையே அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. அதில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டது.
அத்துடன் ஈரான் மீது பொருளாதார தடை விதிப்பதாக அறிவித்தது. மேலும் தனது நட்பு நாடுகளையும் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
இதனால் ஈரானின் பணமான ரியாலின் மதிப்பு குறைந்துள்ளது. பொருட்களின் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளது. ஈரானின் பணமதிப்பு மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்ததால் வர்த்தகர்கள் டெஹ்ரானில் பாராளுமன்றம் முன்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயிலான பேச்சுவார்த்தைக்கு தாயார் டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டார். எனினும், பேச்சுவாத்தைக்கு உடன்படாமல் ஈரான் தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
பேச்சுவார்த்தை தொடர்பாக இப்போது தான் அமெரிக்கா யோசிக்க தொடங்கியுள்ளது, ஏற்கெனெவே பல ஒழுங்கற்ற முடிவுகளை எடுத்துள்ள அமெரிக்காவை நாங்கள் எப்படி நம்ப முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-athirvu.in