இஸ்தான்புல், அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன், துருக்கிய அரசியல் குழு ஒன்றுடன் தொடர்பு வைத்துள்ளதாக இரண்டு வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளதற்காக துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார நடவடிக்கை எடுத்தது.
துருக்கியில் இருந்து இறக்குமதி ஆகும் எஃகு மற்றும் அலுமினியத்தின் மீது விதிக்கப்படும் வரியை இரண்டு மடங்கு உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்தது.
இதனால் ஆசிய வர்த்தகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு துருக்கியின் லிராவின் மதிப்பு சரிவை மிகவும் சரிவை கண்டுள்ளது. வெள்ளியன்று டாலருக்கு நிகரான லிராவின் மதிப்பு 20 சதவீதம் குறைந்தது. கடந்த வருடம் ஏற்கனவே அது 40சதவீதம் வரை சரிவை கண்டுள்ளது.
இது நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். நடவடிக்கைகளின் விவரம் குறித்து சிறிது காலத்தில் அறிவிக்கப்படும் என நாட்டின் நிதியமைச்சர், ஹரியத் கூறி உள்ளார்.
இது குறித்து நாடு துரிதமாக நடவடிக்கை எடுக்கும் எனவும், இந்த வீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வங்கிகள், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகத்திற்கான திட்டங்களும் அதில் அடங்கும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
-dailythanthi.com