நைல் நதியில் படகு விபத்து; 22 பள்ளி குழந்தைகள் நீரில் மூழ்கி பலி

கார்டவும், சூடானில் தலைநகர் கார்டவும் பகுதியில் இருந்து 750 கிலோ மீட்டர் வடக்கே அமைந்த நைல் நதியில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது.  அதில் 40க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பயணம் செய்துள்ளனர்.  அவர்கள் பள்ளி கூடத்திற்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்துள்ளனர்.

இந்த நிலையில், படகு திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.  இந்த சம்பவத்தில் படகில் பயணித்த பள்ளி குழந்தைகளில் 22 பேர் பலியாகி உள்ளனர்.  இந்த விபத்தில் பெண் ஒருவரும் பலியாகி உள்ளார்.

-dailythanthi.com