பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து ஆப்கானிஸ்தானில் 1000 பள்ளிகள் மூடல்

காபூல், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்திற்குள் நேற்று புகுந்த தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிகுண்டை வெடிக்க செய்தார். இந்த தாக்குதலில் 48 பேர் உயிரிழந்தனர். 67 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்த அனைவரும் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்கள் ஆவர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் நடந்த மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.

ஆப்கானிஸ்தானில் பள்ளிகள், கல்லூரிகள் மீது சமீப காலமாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 86 கல்வி நிறுவனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர். கல்வி நிறுவனங்கள் தொடர் தாக்குதலுக்கு ஆளாகி வருவது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அங்கு நாடு முழுவதும் 1000–க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு விட்டன. பாதுகாப்பு காரணங்களையொட்டி அவை மூடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

-dailythanthi.com