பிரான்சில் 1758 பேர் நீரில் மூழ்கிய சம்பவங்களில் 373 பேர் பலியாகினர். இவையாவும் இந்த கோடைகாலத்தில் இடம்பெற்ற மரணங்களாக பதிவானதாக பிரான்சின் பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
புள்ளிவிபரத்தின் படி கடந்த யூன் முதலாம் திகதிமுதல் ஓகஸ்ற் 9 ஆந்திகதி வரை ஒரு நாளுக்கு ஐந்துபேர் வீதம் கடற்கரைகள் ஆறுகள் மற்றும் நீச்சல் தடாகங்கள் ஆகிய நீர்நிலை மையங்களில் பலியாகியுள்ளனர்.
ஐரோப்பில் இந்த கோடைகாலத்தில் நிலவிய வெப்பம் பிரான்சிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் வழக்கத்தை விட இந்த கோடைகாலத்தில் நீர்நிலை மரணங்கள் அதிகமாக ஏற்பட்டுள்ளன.
-athirvu.in